பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி தேதியா?

Friday, 30 Jun

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி தேதியா?

ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் அட்டை, அனைத்து முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி அதற்கான கெடுவும் விதித்து வரும் நிலையில் நாளை அதாவது ஜூலை 1ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், மக்களிடம் ஜூலை 1-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாதா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வருமானவரித்துறை.
https://incometaxindiaefiling.gov.in
 என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.



இந்த இணையதளத்தில் ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பொதுமக்கள் சிலர் இதுவரை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காமலே உள்ளனர். இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அனைவரும் ஒரே நேரத்தில் பாண் எண்ணை இணைக்க மேலே குறிப்பிட்ட இணையதளத்தை அணுகுவதால் வருமான வரித்துறையின் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது

Comments

Popular posts from this blog

Get Offers and Online deals in WhatsApp

Voltas 2 in 1 Convertible Cooling 1.2 Ton 3 Star Split Inverter AC - White (153V ADP, Copper Condenser)

MyTeam11 Earn Unlimited Real Money