ஜியோ போன் டெலிவரி தேதி அறிவிப்பு
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ போன் அறிமுகம் செய்த 4ஜி பீச்சர் போன் டெலிவரி எப்போது ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போன் டெலிவரி கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட இலவச ஜியோ போன் அபரிதமான ஆதரவை பெற்ற 30 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்காலிகமாக ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக முன்பதிவுகளை பெற்றுள்ள காரணத்தால் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜியோபோன் டெலிவரி மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் (செப்டம்பர் 25) டெலிவரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோபோன் முன்பதிவு விபரம் அறிய நீங்கள் ஜியோ 4ஜி போனுக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தால் உங்கள் முன்பதிவு குறித்த விபரத்தை அறிய ஜியோஃபோன் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணிலிருந்து 1800-890-8900 என்ற இலவச தொலை தொடர்பு எண்ணில் அழைத்து அதன் விபரத்தை அறிந...