ஜியோ போன் டெலிவரி தேதி அறிவிப்பு

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ போன் அறிமுகம் செய்த 4ஜி பீச்சர் போன் டெலிவரி எப்போது ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ போன் டெலிவரி

கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட இலவச ஜியோ போன் அபரிதமான ஆதரவை பெற்ற 30 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்காலிகமாக ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக முன்பதிவுகளை பெற்றுள்ள காரணத்தால் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜியோபோன் டெலிவரி மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் (செப்டம்பர் 25) டெலிவரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோபோன் முன்பதிவு விபரம் அறிய

நீங்கள் ஜியோ 4ஜி போனுக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தால் உங்கள் முன்பதிவு குறித்த விபரத்தை அறிய  ஜியோஃபோன் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணிலிருந்து 1800-890-8900 என்ற இலவச தொலை தொடர்பு எண்ணில் அழைத்து அதன் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும், மை ஜியோ ஆப் வாயிலாக My Vouchers டேபில் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
ஜியோ போன் நுட்பம்
2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.
முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.
தினசரி ஒரு லட்சம் மொபைல்கள் என 50 கோடி மொபைல்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் நாள் முன்பதிவு 30 முதல் 40 லட்சத்தை எட்டியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் தொடர்ந்து தற்போது முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
அடுத்த ஜியோபோன் முன்பதிவு
முதற்கட்டமாக முன்பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்கள் டெலிவரி நிறைவடைந்த பின்னர் செப்டம்பர் இறுதி வாரத்தில் அடுத்த முன்பதிவு தொடங்கப்படலாம்.
ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) போன்றவற்றில் Pre Book now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.
முதற்கட்டமாக ரூ. 500 செலுத்தலாம், அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம்.
பணம் செலுத்துவது எவ்வாறு ?
ஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட் , டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம்.
36 மாதங்களுக்கு பிறகு ரூ. 1500 கட்டணத்தை ஜியோ இன்ஃபோகாம் திரும்ப கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Get Offers and Online deals in WhatsApp

MyTeam11 Earn Unlimited Real Money

HDFC Bank Virtual Credit / Gift card